Quantcast
Channel: நமது நம்பிக்கை »இரா.கோபிநாத்
Viewing all articles
Browse latest Browse all 10

வெற்றி வாசல் 2008

0
0

-கோபிநாத்

நாளை நமதே

எங்கிருந்து நம்முடைய வாழ்க்கையை தொடங்குகிறோம்? நாளையைப்பற்றிய அச்சத்திலிருந்து. நாளைக்கு காலையில் என்ன நடக்கும்? நாளைக்கு நான் என்ன செய்யப் போகிறேன்? பெரும்பாலான இந்தியனுடைய கனவு நாளை என்ன? பிள்ளைகளுக்கு என்ன செய்யப் போகிறேன். எந்த வங்கியில், என்ன சொத்து சேர்த்து வைக்கப்போகிறேன். பிள்ளைக்கு யாரைக் கல்யாணம் செய்து வைக்கப் போகிறேன். பிள்ளை என்ன வம்பை இழுத்து வரப்போகிறான். இதில்தான் பலரின் வாழ்வும் தொடங்குகிறது.

உலகின் பெரும்பான்மையான நடுத்தர நாடுகளில் “நாளை”யைக் குறித்த கவலை பெரும்பாலும் இருக்கிறது. தெற்காசிய நாடுகளில் ஆப்பிரிக்கா நாடுகளில் அதிகம், பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளில்தான் “இன்று” என்கிற கான்செப்ட் உண்டு.

ஒரு ஐரோப்பியனைப் பார்த்து நீங்கள் கேட்கிறபோது, கண்ஸ்ங் ச்ர்ழ் ற்ர்க்ஹஹ் என்பான். அதற்கு பொருளாதார சூழல் மட்டும் காரணமல்ல. உளவியல் அதன் பின்னணியில் இருக்கிறது. பெரிய அளவிற்கு நமக்கு எதிர்காலம் குறித்த அக்கறையும் திட்டமிடுதலும் இருப்பதாக நாம் தொடர்ந்து தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். எதிர்காலம் குறித்த பயம்தான் நம்மிடம் இருக்கிறது. அதனால்தான் நிகழ்காலத்தில் இவ்வளவு கவலை இருக்கிறது. பிரச்சனை இதுதான்.

பலபேர் என்னமோ மாதிரி இருக்கிறது என்பார்கள். அது என்ன? ஒரு டட். ஈ. செய்தாவது கண்டுபிடிக்க வேண்டும். என்னவென்றே தெரியாததைப்பற்றி இரண்டு நாளாக எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். இதை விட்டுவிட்டு போய்விடுவோமே. தோண்டி எடுத்துப் பார்த்தால் ஏதோ ஒரு தொலைக்காட்சித் தொடரில் ஒரு கிழடு இறந்து போயிருக்கும். அதுதான் விஷயமாக இருக்கும்.

நம் வாழ்க்கை குறித்த கவனமும் அக்கறையும் நமக்கு இருப்பதாக நம்பிக் கொண்டிருப்பதெல்லாம் வாழ்க்கை குறித்த பயமும், பொறாமையும் மட்டும்தான்.

அடுத்த வீட்டுப் பிள்ளை காரில் போகிறது என்பதில் கவலை இருக்கிறது. என் பிள்ளை காரில் போகவேண்டும் என்பதில் சந்தோஷம் இருக்கிறது. எது வேண்டும்.

வாழ்வில் இரண்டு கேரக்டர் இருக்கிறார்கள். சந்தோஷத்தை வெளியில் தேடுபவர்கள், சினிமாவில் சந்தோஷம் கிடைக்கும். யாராவது சிரிப்பதைப் பார்த்தால் சந்தோஷம் கிடைக்கும். யாராவது வீட்டிற்குப் போனால் சந்தோஷம் கிடைக்கும். சிலர் செத்துப் போனால் சந்தோஷம் கிடைக்கும். இவர்களெல்லாம் சந்தோஷத்தை வெளியில் தேடுபவர்கள். சிலர் சந்தோஷத்தை உள்ளேயே வைத்திருப்பார்கள். எல்லோர்க்கும் கொடுப்பார்கள். கொடுப்பவனுக்குப் பெயர் வள்ளல். வாங்குபவனுக்குப் பெயர் பிச்சைக்காரன்.

சந்தோஷத்தையே அடுத்தவனிடம்தான் கடன் வாங்க வேண்டுமென்றால் இந்தப் பிறப்பெடுத்ததன் நோக்கம் என்ன?

நமக்கு அடிப்படையில் ஆறாவது அறிவு இருப்பதாக அடிக்கடி சொல்லிக் கொள்கிறோமே! ஜெயிப்பதற்காக மட்டுமே கடவுள் செய்திருக்க முடியும். தோற்பதற்காக எவனையும் படைத்திருக்க முடியாது. டாட்டாவை விட, பிர்லாவை விட கடவுள் அறிவாளி என்று நம்பினால், நான் நீங்கள் எல்லோரும் ஜெயிக்கப் பிறந்தவர்கள்.

நம்முடைய முக்கிய கவலை என்ன? எல்லோர்க்கும் ஜெயிக்க வேண்டுமென்கிறஆசை.

நாம் தோற்காமல் இருக்க முயற்சி செய்கிறோம். ஜெயிக்க முயற்சி செய்கிறோமா? யோசித்துப் பார்த்தால் தெரியும்.

நம்முடைய பயணம், திட்டமிடல், களைப்பு, வியர்வை, உழைப்பு, சிந்தனை, செயல்பாடு அத்தனையும் எதிலே இருக்கிறது. ஜெயிப்பதை நோக்கி இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். அதில் இல்லை. தோற்காமல் இருப்பதில் இருக்கிறது. ஏனென்றால் தோற்றுவிட்டால் பக்கத்து வீட்டுக்காரன் கேவலமாகப் பேசுவான். எதிர்வீட்டுக்காரன் அசிங்கமாகப் பேசுவான். ஆடினான், அடங்கிவிட்டான் என்பான்.

இன்றைய தேதிவரைக்கும் நாம் நமக்கான வாழ்க்கையை வாழவில்லை. முதலில் உங்களுக்காக நீங்கள் வாழ ஆரம்பியுங்கள்.

ஒரு நடுத்தரக் குடும்பத்தின் சந்தோஷம் என்பது என்ன? 600 சதுரடியில் ஒரு வீடு. 60 பவுன் போட்டு ஒரு பெண் பிள்ளை கல்யாணம் செய்து கொள்ள எப்போதும் பணம் கேட்டாலும் கொடுக்கக்கூடிய மாமனார். ஒரு கார், உங்களுடைய சந்தோஷத்தை எது தீர்மானிக்கிறது சில காரணிகள்.

உயர்தர குடும்பத்தின் சந்தோஷத்தை எது தீர்மானிக்கிறது. இதைப்போலவே தான். உங்கள் சந்தோஷத்தை நீங்கள்தானே தீர்மானிக்க வேண்டும். சம்பந்தமே இல்லாமல் எங்கோ 920 கி.மீ. க்கு அப்பாலிருக்கிற சிலர் ஏன் தீர்மானிக்க வேண்டும்.

கிராமத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். “எங்கள் ஆத்தா என்னை ஊருக்கா பெத்துப் போட்டாள்? ஆளாளுக்கு அடிக்கிறீர்கள்” என்று. அதைத்தான் நானும் கேட்கிறேன்.

நம் வாழ்க்கையை நாம் வாழ்வதற்கு யாரைக் கேட்க வேண்டும். வானம் பிடித்திருக்கிறது. ரசியுங்கள். நிலா பிடித்திருக்கிறது ரசியுங்கள். சிலர் சிரிக்கவே மாட்டேன் என்கிறார்கள். நற்ழ்ண்ஸ்ரீற்-ஆக இருக்கிறார்களாம்.

எனக்குக் கிடைத்த வாய்ப்பில் தமிழகத்தில் மட்டுமல்ல, ஏறக்குறைய இந்தியாவின் முக்கியமான எல்லாத் தலைவர்களையும் நான் பேட்டி எடுத்திருக்கிறேன்.

அவர்கள் அத்தனை பேரிடத்தும் ஒவ்வொரு சிறப்புக் குணம் இருந்தது. என்னால் அதைச் சொல்ல முடியும். அவர்கள் அத்தனை பேரிடத்திலும் பொதுவான ஒரு குணம் இருந்தது. அது நகைச்சுவை.

சின்னச் சின்ன விஷயங்களிலும் நகைச்சுவையை உருவாக்கி தன்னை தாங்களே ரிலாக்ஸ் செய்து கொள்கிறார்கள். அந்த நகைச்சுவை குணம் மட்டும் நீங்கள் நினைக்கிற அத்தனை சீரியஸ் மனிதர்களிடமும் இருக்கிறது. அதனால்தான் இவ்வளவு வெற்றிகரமாக இருக்க முடிகிறது.

மனிதன் இயந்திரமல்ல. தன்னைத்தானே சுவாரஸ்யப்படுத்திக் கொண்டு வாழ்வின் எல்லா அங்குலங்களையும் அளந்து பார்க்கிற ரசிகனால் மட்டுமே ஜெயிக்க முடிகிறது. உங்களுக்கு காட்டுகிற பிம்பங்கள் வேண்டுமானால் சீரியஸாக இருக்கலாம்.

ஓர் ஆய்வுக் கட்டுரை சொல்கிறது. பத்தில் ஆறு இந்தியனுக்கு ஒரு குணம் இருக்கிறது. இன்று நிறையச் சிரித்தால், இன்றைக்கு இவ்வளவு சிரிக்கிறோமே, நாளை அழுவோமா என்று நினைப்போம்.

சிரிப்பைக் கூட நிம்மதியாக சிரிப்பதில்லை. ஜெயிப்பதற்கு பிறந்தவன் ஜெயிப்பதைப் பற்றித்தானே யோசிக்க வேண்டும். சரியா இல்லையா? நம்மை முட்டாள் என்றே வைத்துக் கொள்வோம். கடவுள் முட்டாளில்லையே எதற்காக ஒருவனை படைக்கவேண்டும்.

இன்றைக்கு வாழ்வதைப்பற்றி யோசித்திருந்தால் நாளை நம்முடையதாகத்தான் இருக்கும். நாளை நமதே என்று கேள்விக்குறியும் கிடையாது, ஆச்சரியக் குறியாகவும் கிடையாது. அது ஒரு வார்த்தையாக வடிவமெடுக்கும்.

திறமையில்லாதவனுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்டதாகக் கவலை. பத்து பைசாவிற்கு பயன்படாதவனுக்கு மேனேஜர் பதவி. அப்படியென்றால் நீங்கள் ஐந்து பைசாவிற்கும் பயன்படவில்லையென்றுதானே அர்த்தம். ஏன் யோசிக்கவே இல்லை.

வாழ்க்கையில் நான் விடாமுயற்சியோடு போராட விரும்புகிறேன். நல்ல விஷயம். ஆனால் விடாமுயற்சி என்றால் என்ன? ஒருவர் செய்ததை அதே போல திரும்பச் செய்வதுதான் விடா முயற்சியா?

விடாமுயற்சிக்கு கஜினி முகமதுவை உதாரணம் சொல்கிறோம். ஆனால் அவன் வெற்றியைச் சொல்லவில்லை. பதினேழு முறையும் வெற்றி பெற்றான். பதினாறு முறை படிப்படியாக வெற்றி. பதினேழாவது முறை மொத்தமாகக் கொண்டு போனான்.

இந்த சமுதாயம் நீங்கள் எப்படி பார்க்க வேண்டும் என்று நினைக்கிறதோ அப்படியாக உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளவேண்டும் என்று ஒரு மூன்றாவது மனிதனின் பார்வையிலிருந்து பார்க்கிறீர்கள்.

யாரோ எதுவோ ஆகச்சொல்கிறார்கள். ஆகிவிடுகிறோம். உங்களுடையது என்ன இந்த வாழ்க்கையில். பிறந்ததைத் தவிர உங்கள் பங்கு உங்கள் வாழ்க்கையில் என்ன?

உங்கள் மனது தேடி, தேடிப் போய் எதிர்மறை எண்ணத்தில் விழுகிறது. எங்கெல்லாம் தவறான விஷயம் நடக்கிறதோ. அதையெல்லாம் தேடித் தேடி மனதில் போட்டுக் கொள்வது.

காப்மேயர், “உங்கள் மனது குப்பைத் தொட்டி. அதைக் குப்புற கவிழ்த்துவை” என்பார். உங்கள் சொந்தக் குப்பையே ஏராளமாய் இருக்கிறது.

உங்களுக்காக நீங்கள் கவலைப்பட ஆரம்பியுங்கள். பொது நல விஷயங்களுக்கு எதிரான ஒன்றைச் சொல்கிறேன் என நீங்கள் கருதலாம்.

உங்களுக்காக நீங்கள் வாழப் பழகுங்கள். அது சுயநலமல்ல. வாழ்க்கையை வாழ்வதும் சுயநலமாக வாழ்வதும் வேறு வேறு. உங்களுக்காகப் பாருங்கள்.

வாழ்க்கையை உங்களுக்காக வாழ ஆரம்பியுங்கள்.

எங்கே பிரச்சனையை வைத்திருக்கிறோம். எங்கே தேடுகிறோம்? ஒரு கிராமத்தில் இருவர் எதையோ தேடிக் கொண்டிருக்கிறார்கள். நல்ல விளக்கு வெளிச்சம். இருவரையும் பார்த்து ஒரு பெரியவர் கேட்க, “மோதிரம் விழுந்துவிட்டது தேடுகிறோம்” என்றார்கள்”. உடனே பெரியவரும் சேர்ந்து தேடினார். ஏம்பா இங்கே தானே விழுந்தது என்று பெரியவர் கேட்டார். “இல்லையில்லை. வீட்டுக்கிட்டே விழுந்துச்சு “. வீட்டுக்கிட்ட விழுந்ததை இங்க வந்து தேடறீங்க. இங்கதானே வெளிச்சம் இருக்கு. எங்க வெளிச்சம் இருக்கிறதோ அங்கே தேடுகிறோம் என்று பதில் வந்தது.

வாழ்க்கை என்பது என்ன?

சம்பாதிப்பது, சாதனை செய்வது, அமெரிக்காவிற்கு போவது, திருமணம் செய்வது இவையெல்லாம் வாழ்க்கையில் இருக்கிறது. இதைத்தாண்டி ஒன்று இருக்கிறது. வாழ்வது என்ற ஒன்று இருக்கிறது. வாழ்க்கை வாழ்வதற்குத்தான். அதற்குத் தேவையான விஷயங்களை விட்டுவிட்டு, நம் பிரச்சனை முழுக்க என்ன, எப்படி வாழப் போகிறோம் என்ற கவலையிலேதான் போகும்.

9 ஆண்டுகளுக்கு முன் துணிவிற்றுக் கொண்டிருந்தேன். ஆடித்தள்ளுபடியெல்லாம் கொடுத்து கடைகளில் விற்பனை செய்கிறபோது வீட்டிற்கு எடுத்துச் சென்று விற்கமுடியுமா? முடியும். நான் ஒரு குடியிருப்புப் பகுதிக்குச் சென்றால் 100 பீஸ்கூட விற்றுவிடுவேன். ரொம்பச் சுலபம் அது.

இரண்டு வீட்டுக் கதவை தட்டுவேன். இரண்டு பெண்களையும் களத்தில் இறக்குவேன். இவர்களுக்கு என்ன வேண்டுமென்று இவர்களுக்கே தெரியாது. அடுத்தவர்களுக்குச் சொல்வார்கள். காசை மட்டும் வாங்குபவர் கொடுத்தாலும் எனக்கு சிகப்பு சேலை பிடிக்கும் என்று யாரும் எடுத்ததே கிடையாது. ஆளாளுக்கு எடுப்பார்கள். அண்ணி சொன்னாங்க என்று எடுத்தேன். கீழ்வீட்டுக்காரங்க சொன்னாங்க என்று எடுத்தேன் என்பார்கள். கடைசிவரை நம் வாழ்க்கை அடுத்தவன் ஆசையை நிறைவேற்றி வைப்பதிலேயே போகிறது.

என் சுதந்திரம், என் வாழ்க்கை, என் குடும்பம் என்று என்றைக்கு வாழ ஆரம்பிக்கிறோமோ அப்போது மனது சுதந்திரப்படும். சுதந்திரமான மனது சிந்திக்க ஆரம்பிக்கும். சுதந்திரமான மனதுதான் தீவிரமாக சிந்திக்கும். அடிப்படையில் இருந்து உங்கள் பிரச்சனைகளைப் பாருங்கள்.

முதல் பிரச்சனை. என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு ஒரு நல்ல வேலை வேண்டும். இப்படி குறுக்கிக் கொள்ளுங்கள். நல்ல வேலை என்பது என்ன? இதையும் சுருக்குங்கள். என்னுடைய அடிப்படை திறமையோடு பொருந்துகிற ஒன்று. இல்லை என் குடும்பச் சூழலின் பிரச்சனையை தீர்ப்பதற்கு நல்ல சம்பளம் தருகிற வேலை .

அடுத்து எனக்குப் பிடித்த வேலையைப் பெற என்னென்ன வாய்ப்பிருக்கிறது. அதிகமான சம்பாத்தியத்தைப் பெற என்ன செய்ய வேண்டும். இந்த இரண்டையும் நான் யோசிக்கிறேன். பிரச்சனையின் அளவு, அகலமும், நீளமும் சுருங்குகிறபோது யோசிக்கிறேன்.

பிரச்சனை என்பது நீங்கள் வடிவமைத்த பிம்பம்தான். பெரிது என்றால் பெரிது. சிறிது என்றால் சிறிதுதான். பிரச்சனையை குறுக்கிக் கொள்கிற போது நான் என்ன செய்ய வேண்டுமென்கிற வடிகால் கிடைக்கிறது. மனது, மூளை எல்லாம் சிந்திக்கும்.

என்ன செய்வதென்றே தெரியாமலிருந்த இடத்திலிருந்து உங்களுடைய குறிக்கோளை எட்டுவதற்கான இடத்தை உங்கள் மூளை உங்களுக்குத்தர தயாராக இருக்கிறது. நாம் அதிலே கவலைகளை இட்டு நிரப்பி வைத்திருப்போமென்றால், நாளை எப்படி வசமாகும்? முதலில் இன்றைக்குத்தானே தேவை?

“ஆழமாக மனதிற்குள்ளே ஒன்றைச் சொல்லிவிட்டால் அது பார்த்துக் கொள்ளும் மற்றவற்றை” என்கிறார்கள். நீங்கள் எங்கே விழுந்தீர்கள் என்று பார்க்காதீர்கள். எங்கே தடுமாறினீர்கள் என்று பாருங்கள்.

என் வாழ்க்கை இப்படித்தான் இருக்க வேண்டுமென்று எப்போது நம்முடைய உள் மனது தீவிரமாகத் தீர்மானிக்கிறதோ அன்று ஆரம்பிக்கிறது வெற்றி வாசல்.

எல்லோரும் வெற்றியின் பிம்பத்தைப் பார்க்கிறீர்களே ஒழிய, அவன் வெற்றி பெற என்ன செய்தான் என்று எப்போதாவது பார்த்திருக்கிறோமா?

என்னைவிட ஒருவனுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதைக்கொண்டு மேலே வந்துவிட்டான். அது திறமை தானே!

அவன் ஐந்தாயிரம் ரூபாய் கூட சம்பாதிக்கிறானே என்று மட்டும் கவலைப் படுகிறோமே. நான் அப்படி சம்பாதிக்க நான் என்ன செய்ய வேண்டுமென்று சிந்திக்க வேண்டும்.

திறமை, சக்தி அனைத்தையும் அடுத்தவன் வெற்றிமீதும்,தோல்விமீதும் செலவழிப்பீர்களென்றால் உங்களுடைய வெற்றியைக் கவனிப்பதற்கு எங்கிருந்து சக்தியை கொண்டு வரப்போகிறீர்கள்?

உங்கள் வாழ்வில் நீங்கள் தோற்பதற்காக எடுத்துக் கொள்கிற முயற்சிகளில் 50% எடுத்துக் கொண்டால்கூட ஜெயித்துவிடலாம் என்று சொல்கிறார்கள்.

வாழ்வை நேர்மறையாகப் பாருங்கள். வாழ்க்கையை நேர்மறையாகப் பார்த்தால் வாழ்க்கை உங்களை நேர்மறையாகப் பார்க்கும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதுதான் திரும்ப நடைபெறும்.

உங்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லையென்றால், அடுத்தவன் எப்படி உங்கள் மேல் நம்பிக்கை வைப்பான்.

நம்பிக்கை தெளிவைக் கொடுக்கும். வாழ்வில் ஜெயித்துவிடுவேன் என்கிற துடிப்பு இருக்கும்.

வாத்தியாரிடமிருந்து அடி வாங்காமல் தப்பிப்பதற்காக கணக்கு போடுகிறோமே தவிர கணக்கு கற்றுக் கொள்வதற்காக அல்ல.

காந்தி கையில் ஒரு கைத்தடியைத் தவிர என்ன இருந்தது. எப்படி அவரை இந்தத் தேசம் நம்பியது. வெள்ளைக்காரர்கள், கிறுக்கன்போல இருக்கிறார். எப்படி இவரை நம்புகிறீர்கள் என்று கேட்டார்கள். ஏனென்றால், காந்தி அவரை நம்பினார். அந்த நம்பிக்கை, நம்மை நம்ப வைத்தது.

முதலில் உங்களை நீங்கள் நம்புங்கள். எப்படி இருக்கிறீர்கள் என்பதைவிட நல்லாயிருக்கிறீர்களா என்று கேட்பவரைத்தான் உங்களுக்குப் பிடிக்கும். ஏனென்றால் நீங்கள் நன்றாகத்தான் இருப்பீர்கள். இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்கள். சந்தோஷத்தை உள்ளே வைத்திருப்பவர்கள்.

நீங்கள் தீர்மானித்த வெற்றிகள் ஒவ்வொன்றிலும் ஒருவன் மட்டும் தான் இருக்கிறான். அப்புறம் எப்படி இவ்வளவு பேர் ஜெயிக்க முடியும். அதுதான் இப்பொழுது மாற்ற ஆரம்பித்தார்கள். நிறையப் பள்ளிகளில் தஹய்ந் இல்லாமல் போனதற்கான காரணம் அதுதான்.

தோற்பதற்குப் பிறந்தவன்தான் ஜெயிப்பதற்கு போராட வேண்டும். ஜெயிக்கப் பிறந்தவன் ஜெயித்துக் கொண்டே இருப்பதற்குத்தான் போராட வேண்டும்.

உங்கள் மூளைக்குள் என்ன இருக்கிறது என்பது அமெரிக்காக்காரனுக்குத் தெரியும். உங்களுக்குத் தெரியாது.

திருநெல்வேலியிலிருந்து பென்டகன் சென்று அங்கிருந்து வந்து திருமணம் செய்து கொண்டு போகிறானே ஏன்? அவன் பார்க்காத பெண்ணா? ஏன். திருநெல்வேலிப் பெண் தான் கண்கலங்காமல் காப்பாற்றும். அடிப்படையிலேயே இந்தியப் பெண்கள் புத்திசாலிகள்.

ஆச்சிகளும், நாயர் வீட்டுப் பெண்களும் போடாத கால்குலேஷனையா உங்கள் கம்ப்யூட்டர் சொல்லிக் கொடுத்துவிட்டது.

அமெரிக்காவிற்கு வந்து கம்ப்யூட்டரை அனைவரும் கற்றுக் கொள்ள எடுத்துக்கொண்ட கால அளவை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்தியாவிற்கு கம்ப்யூட்டர் வந்து அதை நம் பிள்ளைகள் விளையாட்டுப் பொருளாக பயன்படுத்த ஆரம்பித்த காலம் ரொம்ப குறைவு.

தோற்பதற்கு இடமில்லை. இயல்பாகவே உங்களுக்கு மோதத் தெரியும், முட்டத் தெரியும். ஆங் ஜ்ட்ர் ஹ்ர்ன் ஹழ்ங் .

முடிவெடுத்தல் என்பது வாழ்வின் முக்கியமான ஒன்று. அதையும் யாராவது சொல்லிவிட்டால் பரவாயில்லை. “சித்தன் போக்கு சிவன் போக்கு என்று வாழ்ந்து கிடப்பேன் என்றால், இந்த 110 கோடியில் நீங்கள் ஒரு சதை. அமெரிக்காக்காரன் நம்புவதை ஆரம்பித்தால் நீங்கள் ஒரு மூளை.

நீங்கள் மூளையா, சதையா என்பதை முடிவெடுங்கள். நாளை நமதாகும். சந்தனக்காற்று நம் சன்னலில் வீசட்டும். சரித்திரம் நம் சாதனை பேசட்டும்.


Viewing all articles
Browse latest Browse all 10

Latest Images

Trending Articles


கூரைகத்தாழை மீன்கள் அதிகளவில் சிக்கின காரைக்காலில் ஒரே நாளில் ரூ.1 கோடிக்கு...


செவ்வாய் ஜாதகத்தில் எதையெல்லாம் குறிக்கிறார்..? காரகத்துவம்


எடப்பாடி அருகே போதையில் அரை நிர்வாண ஆட்டம்: தம்பதிக்கு தர்மஅடி


Dhanush, Manju warrier வாழ்ந்து அசத்திய திருநெல்வேலி காடு எங்க இருக்கு தெரியுமா?


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


Fantastic Beasts and Where to Find Them (2016) Tamil Dubbed Movie HD 720p...


செய்வினை தோஷம் போக்கும் எளிய பரிகாரங்கள்


மலர் காவடி 600 முதல் 1,500 ஆடிக்கிருத்திகை காவடி விற்பனை களைகட்டியது


ஊரடங்கால் தனியார் நிறுவன ஊழியர்கள் ஊதியம் இழப்பு பொருளாதார ஊக்குவிப்பு...


திருப்பாவை தனியன்கள்


உங்கள் எண் என்ன? - நாவல் விமர்சனம் - இல்லோடு சிவா


Operation Valentine (2024) HD 720p Tamil Movie Watch Online


உள்ளும் புறமும், அந்தரங்கமும் அரசியலும், பிணங்கும் பயணம்- ஸ்வர்ணா ராஜகோபாலன்


அறிவுக்கொழுந்து எடப்பாடி பழனிசாமி.. வாயால் வடை சுடும் மோடி - விளாசித் தள்ளிய...


எக்ஸ்- வீடியோஸ் பட டிரெய்லரை வெளியிடும் நடிகை கஸ்தூரி


நினைத்ததை நிறைவேற்றும் சாய்பாபாவின் வியாழக்கிழமை விரதம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


1 - தைமூர் (பகுதி 1 /2 ) - வந்தார்கள் வென்றார்கள்


விநாயகத் தத்துவம்! ஆன்மீகத் தகவல்கள்!


அடித்துப்பாடும் பாடகி…..